மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் நிர்வாக முடக்கத்துக்கு துண்டுபிரசுரம்!


வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நிர்வாக முடக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளார்.

மட்டக்களப்பில் களுவாஞ்சிக்குடி பகுதியில் இன்றைய தினம்(24.04.2023) இந்த துண்டுபிரசுரம் ஆரம்பகட்டமாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராகவும், வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்ற சிங்கள-பௌத்த மயமாக்கலைக் கண்டித்தும் நாளை(25.04.2023) வடக்கு-கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை