மட்டக்களப்பு சித்தாண்டியில் விபத்தில் மூளைச் சாவடைந்த குடும்பஸ்தரின் உடலுறுப்புக்கள் தானம் வழங்கிய குடும்பத்தினர்!

மட்டக்களப்பு சித்தாண்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூளைச்சாவடைந்த இளைஞனின் சிறு நீரகங்கள், கல்லீரல், நுரையீரல், இதயம் ஆகிய
உறுப்புக்கள் குடும்பத்தினரால் தானம் செய்யப்பட்டுள்ளன.

கிரானுக்கும் சித்தாண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான
இந்திரசேன ரேனுஜன் என்ற குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் மூளைச் சாவடைந்துள்ளதாக, வைத்தியர்கள் தெரிவித்த நிலையில், வைத்தியர்களின் ஆலோசனையுடன் அவரது உடலுறுப்புக்களை குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப் பகுதி மக்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
புதியது பழையவை