அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் ,சமுர்த்தி அபிமானி வர்த்தகக்கண்காட்சியும் விற்பனை சந்தையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கிருபாகரன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதேச செயலாளர் பபாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு,விற்பனை சந்தையினை திறந்து வைத்தார்.
சமுர்த்தி பயனாளிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
வர்த்தகக்கண்காட்சியில் உதவிப்பிரதேச செயலாளர் சுபாகர் , திட்டமிடல் பணிப்பாளர் ஹிசைன்டீன் ,நிருவாக உத்தியோகத்தர் சோபிதா,
உட்பட பலர் கலந்து கொண்டனர்.