நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியின் ஏழாம் கட்டை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்துச் சம்பவம் நேற்று(28) இடம்பெற்றுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நிலாவெளி பொலிஸார் விசாரணை
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 வயது குழந்தை உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக சிகிச்சைகளுக்காக 3 வயதான குழந்தையும், தந்தையும் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.