மட்டக்களப்பு பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி


மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பகுதிகளில் ஒன்றான வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை விநாயர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல திறனாய்வுப்போட்டி இன்று நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் வ.புஸ்பாகரன் தலைமையில் நடைபெற்ற இல்ல திறனாய்வுப் போட்டிக்கு, கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி கனகசூரியம் அகிலா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அதிதிகள் வரவேற்கப்பட்டு தேசியக்கொடிகள் மற்றும் பாடசாலை கொடிகள், இல்லக்கொடிகள் ஏற்பட்டு அணி வகுப்பு மரியாதை செய்யப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.

அலங்கரிக்கப்பட்ட விளையாட்டு போட்டி தொடர்பான பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது. மாடு பூட்டிய வண்டியில் அரச வேடம் அணிந்து வந்த மாணவர்களினால் பிரதம அதிதியிடம் விளையாட்டுப் போட்டி தொடர்பான அறிவிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வானது வித்தியாசமான முறையில் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரினால் அதிபர் மற்றும் உடற் கல்வி ஆசிரியர் வஜிகரன் ஆகியோர் பாராட்டப்பட்டனர். 

முல்லை, மருதம் ஆகிய இல்லங்களாக மாணவர்கள், பல்வேறு விதமான திறமைகளை வெளிக்கொணரும் வகையிலான போட்டிகள் நடாத்தப்பட்டு, வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.புதியது பழையவை