ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் இப்போதும் தொடர்கிறது - எஸ்.வியாழேந்திரன்



மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 1250 குடும்பங்களுக்கு மியன்மார் நாட்டு அரசாங்கம் வழங்கிய அரிசியைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வின் போது இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு வறிய நிலையில் உள்ள மக்களுக்கு அரிசிப்பொதிகளை வழங்கும் பணி வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் ஊடாக
முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மியன்மார் அரசாங்கத்திடம் வர்த்தக வாணிபத்துறை அமைச்சு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் விசேடமாக இந்த அரிசி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுமார் 1250 குடும்பங்களுக்கு தலா 20கிலோ வீதம் இந்த அரிசியினை வழங்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சுதாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அரசியினை வழங்கிவைத்தார்.



புதியது பழையவை