சிங்ப்பூரில் இன்று மரண தண்டனையை எதிர்நோக்கவுள்ள தமிழர் - உயிரை காப்பாற்ற போராடும் குடும்பத்தினர்!



சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிங்கப்பூர் வாழ் தமிழ் இளைஞர் இன்று (புதன்கிழமை ) மரண தண்டனையை எதிர்நோக்கவுள்ளார்.

2017ஆம் ஆண்டு ஒரு கிலோ கஞ்சா கடத்தலுக்கு துணை புரிந்த குற்றத்திற்காக தங்கராஜு சுப்பையாவிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

சுப்பையாவின் மரண தண்டனை ஏப்ரல் 26 ஆம் திகதி சாங்கி சிறையில் நிறைவேற்றப்படும் என்று சிங்கப்பூர் சிறைத்துறை உறுதி செய்துள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அவர் நேரடியாக ஈடுபடாததால் அவரது குடும்பத்தினர் மரண தண்டனையை இரத்து செய்யுமாறு மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.


தங்கராஜுக்கு தமிழ் மட்டுமே தெரியும் என்ற சூழலில், பொலிஸார் கூறும் அறிக்கையை அவரால் சரியாக புரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளதாகவும், மொழிபெயர்ப்பாளர் வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேறவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், தூக்கு தண்டனை நிறைவேற்றும் அறைக்கு தங்கராஜை அழைத்து சென்று அதிகாரிகள் காண்பித்துள்ளனர் எனவும் அவர் தனது சகோதரியிடம் கூறியுள்ளார்.


உயிரை காப்பாற்ற போராடும் குடும்பத்தினர்
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தங்கராஜுவின் குடும்பத்தினர்,

மரண தண்டனை தொடர்பான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானதையடுத்து, சாங்கி சிறையில் தங்கராஜுவை சந்திக்க முடிந்தது."அவர் என் அம்மா உடைந்து விடுவதை விரும்பாததால், துணிச்சலுடன் இருப்பதாக காட்டிக்கொண்டார்," என்று தங்கராஜுவின் மருமகள் சுபாஷினி இளங்கோ கூறியுள்ளார்.


இந்த நாளுக்கு அவர் மனதளவில் தயாராகிவிட்டார். இந்த வழக்கில் தனக்கு பெரிய அநீதி இழைக்கப்படுவதை அவர் உணர்கின்றார். செய்யாத காரியத்துக்காக அவர் தூக்கிலிடப்படுவார் என்று அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

தங்கராஜுவின் மரணம், தூக்கு தண்டனையில் முடிந்தாலும் கூட சிங்கப்பூரின் சட்ட அமைப்பில் சீர்திருத்தங்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்று தங்கராஜுவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

என் அண்ணனுக்கு நடந்த அநியாயம் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. அதனால் தொடர்ந்து போராடுவேன்.கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்து தங்கராஜுவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படுமா என்ற ஏக்கத்தில் உள்ளோம் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தலுக்காக 11 பேர் தூக்கிலிடப்பட்ட நிலையில், இந்தாண்டு முதல் முறையாக தங்கராஜ் சுப்பையாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவிட் தொற்றுநோய்க்குப் பின்னர் அரசாங்கம் மீண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்திய நிலையில், கடந்த ஆண்டு ஏராளமான போராட்டக்காரர்கள் மரண தண்டனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் சிங்கப்பூர் தமிழரான தங்கராஜூ சுப்பையாவின் (46) மரண தண்டனை இந்த ஆண்டு நிறைவேற்றப்படவுள்ள முதல் மரண தண்டனை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை