முன்பள்ளி ஆசிரியை கழுத்தறுத்து படுகொலைபேராதனை, இலுக்வத்தை பகுதியில் நேற்று (07) காலை முன்பள்ளி ஆசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

25 வயதான யுவதியே இவ்வாறு கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலர் பாடசாலையில் நடைபெறவிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த வேளையில் கினிஹேன மயானத்திற்கு அருகில் அவரது கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்பள்ளி ஆசிரியையின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து தரவுகளை பெற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலையாளி இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை