உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குலில் உயிரிழந்தவர்களுக்கு - மட்டக்களப்பு மாநகர சபையினால் அனுஷ்டிப்பு!
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஈஸ்டர் குண்டுதாக்குலில் உயிரிழந்தவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது மட்டக்களப்பு மாநகர சபையினால் அமைக்கப்பட்ட காந்தி பூங்கா நினைவு தூபியில் இன்று (21-04-2023) அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் திரு. நா. மதிவண்ணன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாநகர சபையின் பிரதி ஆணையாளர் திரு.உ. சிவராஜா, பிரதம கணக்காளர் திருமதி. ஹெலன் சிவராஜா, நிர்வாக உத்தியோகத்தர் திருமதி. கே.பிரேமகுமார் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு விஷேட ஜெப ஆராதனைகளில் ஈடுபட்டதுடன் மலர் தூவி, சுடர் ஏற்றி, அஞ்சலியும் செலுத்தினர்.


புதியது பழையவை