கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மகளிற்காக - பேராசிரியர் கென்னடியின் தில்லுமுல்லு!


நீண்ட காலமாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்களாக தெரிவு செய்யப்படும் நபர்களை ஆசிரியர் சங்கமாகனது தமது பலத்தினை பிரயோகித்து மிரட்டல் விடுத்து சரியான முறையில் நிர்வாக செயற்பாடுகளை ஒழுங்கான முறையில் நடாத்த பல வழிகளிலும் தடையாக இருக்கிறது.

இதன் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி என்பது இன்று வரை எட்டப்படாத விடயமாகவே உள்ளது.

இதனால் பாதிக்கப்படுவது கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலமே…

குறிப்பாக கலை கலாச்சார பீட மாணவர்கள் பெரும்பாலும் வடக்கு கிழக்கு மலையக பகுதிகளை சேர்ந்த வறுமையின் பிடியில் வாழும் மாணவர்களே.

அவர்களின் பட்டப்படிப்பு கற்கை காலத்தினை குறிப்பிட்ட காலப்பகுதியில் நிறைவடைய செய்யாமல் நீடித்தமையே கிழக்குப் பல்கலைக்கழகம் செய்த மிகப் பெரிய சாதனை. இச் சாதனை புரிந்த ஆசிரியர் சங்கத்திற்கு வாழ்த்து கூறியே ஆக வேண்டும்.

சாதாரணமாக மூன்று வருடங்களில் நிறைவடைய வேண்டிய பொதுக் கலைமானி பட்டப்படிப்பு நான்கரை ஆண்டுகளின் பின்னரும் சிறப்புக் கற்கை மாணவர்களின் நான்கு வருட கற்கை காலத்தினை ஆறு வருடங்கள் நீடித்தும் மாணவர்களின் வாழ்க்கையினை கேள்விகுறியாக்கிய கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை நினைக்கும் போது உடம்பெல்லாம் புள்ளரிக்கிறது.

எத்தனையோ கனவுகளை சுமந்து கொண்டு பட்டபடிப்பு மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசையிலும் பெற்றோரின் சுமைகளை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கால் பதித்த மாணவர்களின் கனவுகள் அனைத்தையுமே தமது சுயலாபத்திற்காக கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சிதைப்பதென்பது வேதனையாக உள்ளது.

பல லட்சம் ரூபாயில் சம்பளம் பெறும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் சுயலாபத்திற்காக செயற்படுவதென்பது எவ்விதம் நியாயமாக அமையும்.


குறிப்பாக மாணவர்களுக்கான பரீட்சையினை உரிய காலத்தில் நடாத்த விடாமல் தடுத்தல் மற்றும் தமது பதவியுயர்வு செயற்பாடுகளை மாத்திரம் கருத்தில் கொண்டு செயற்படுத்தல் போன்ற அநாகரீகமான செயற்பாடுகளை மேற்கொள்ளல் என்பது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பது கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறியாத விடயமல்ல.

இதில் பிரதான சூத்திரதாரி கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீட முன்னாள் பீடாதிபதி கென்னடி என்பது பல்கலைக்கழக சமூகம் அறிந்த நிதர்சனமான உண்மையாகும்.

அவரது பதவியாசையும் ஊழலுமே கலை கலாச்சார பீடத்தின் வீழ்ச்சிக்கும், எத்தனையோ மாணவர்கள் பட்டப்படிப்பினை முடித்தும் வேலையின்றி எதிர்காலத்தில் என்ன செய்வதென்றறியாது இருப்பதற்கும் காரணம் இவரது வினைத்திறனற்ற செயற்பாடுகளே என்றால் மறுக்க முடியாது.

கென்னடி அவர்களின் துணைவேந்தராக வரவேண்டும், பீடாதிபதியாக வரவேண்டும் மேலும் அவரது மனைவி திருமதி கென்னடி அவர்கள் தொடர்ந்தும் விபுலானந்த அழகியல் கற்கை நிறுவனத்தின் பணிப்பாளராக தொடர்ந்து செயற்பட வேண்டும்.

யாழ் பல்கலைக்கழகத்தில் மொழி பெயர்ப்பு கற்கையினை மேற்கொள்ளும் அவரது மகளை விரிவுரையாளராக கொண்டு வர வேண்டும் என்று அவர் போடும் திட்டங்களை கூறிக் கொண்டே போகலாம்.

இதில் நகைச்சுவை என்னவென்றால் அவரது பீடாதிபதி காலப்பகுதியில் அவரது மகள் சிறந்த புள்ளிகளை பெற வேண்டும் என்பதற்காக பரீட்சை நடைபெற முன்னரே கேள்வித்தாளினை மகளுக்கு பெற்றுக் கொடுத்த தில்லுமுல்லு வேலை யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றார் பாவம்.

இவ்வாறு தமது குடும்ப நலனிற்காக செயற்படுவது எவ்வளவு கேவலமான செயல் என்று எதிர்காலம் அவருக்கு உணர்த்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதே போன்று கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலத்தை இல்லாமல் செய்வேன் என்று திடசங்கற்பம் ஏற்று செயற்படும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மருத்துவ பீட பீடாதிபதி சதானந்தன் அவர்களைப் பற்றி இங்கு கூறாமல் கடந்து செல்ல முடியாது.

தொழிற் சங்க நடவடிக்கையினை காரணமாக கூறி மாணவர்களின் பருவகால பரீட்சையினை நடாத்த விடாமல் செயற்பட்ட இவர்தான் இக்காலத்தில் தமது பதவியுயர்விற்கு கோரிக்கையும் விடுத்திருந்தாராம்..

மாணவர்களின் வாழ்க்கை எப்படி போனாலும் பரவாயில்லை ஆனால் தமக்கு பதவியுயர்வு மாத்திரம் வேண்டுமாம். வெட்கம் இல்லையா?

அவரது மனைவி அவருக்கு துணையாம் என்றும் ஒரு விடயம் உலாவுகிறது. என்னவென்றால் கலை கலாச்சார பீடத்தில் அனைத்து வருட மாணவர்களுக்கும் பரீட்சை இடம்பெறுகிறது.

ஆனால் கணித பாடத்தினை கற்பிக்கும் அவரது மனைவி திருமதி.சதானந்தன் அவர்கள் தொழிற் சங்க நடவடிக்கையினை காரணமாக கூறி மாணவர்களின் பரீட்சை வினாத்தாளினை இன்னும் தயார் செய்யாமல் உள்ளார்.

இதனால் இப்பாடம் மாத்திரம் இன்னும் பிற்போடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்று ஏன் அவர் உணராமல் இவ்வாறு செயற்படுகின்றனார் என்பது புரியவில்லை.

தமது பெற்றோரை சமூகத்தின் முன் நன் மதிப்புடன் நடமாட வைக்கும் கனவில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழக மாணவரினதும் குரல் இது.பிள்ளையினை பெற்று வியர்வை சிந்தி உழைத்து பல்கலைக்கழகம் அனுப்பி எதிர்காலத்தை நோக்கி பார்த்திருக்கும் தாய், தந்தையின் குரல் இது.

பல லட்சம் சம்பளமாக பெறும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்கு தெரியாது ஓர் ஏழைக் குடும்பத்தில் பட்டதாரி உருவாகும் கனவு எவ்வளவு கடினமானதென்று.

இலங்கையில் காணப்படும் பல்கலைக்கழகங்கள் அனைத்துமே மாணவர்களின் நலனிற்காக மாத்திரமே உருவாக்கப்பட்டவையே மாறாக கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை போன்ற சுயநலவாதிகளுக்காக அல்ல என்பதை காலம் மிக விரைவில் அவர்களுக்கு உணர்த்தும்……

இன்னும் பல உண்மைகள் விரைவில் வெளியிடப்படும்.
புதியது பழையவை