மட்டக்களப்பில் விசேட தேவையுடைய சிறுவர் இல்ல பிள்ளைகளை சித்திரவதை - சானக்கியன் திடீர் விஜயம்!மட்டக்களப்பில் விசேட தேவையுடைய பிள்ளைகளை சித்திரவதை செய்தமை தொடர்பில் நேற்றைய தினம்(20.04.2023) வெளியான காணொளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான பராமரிப்பு நிலையத்திற்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விசாரணை நடத்தியுள்ளார்.

இதன்போது இரா.சாணக்கியன் பராமரிப்பு நிலைய பொறுப்பாளர் உட்பட பணியாளர்களிடம் விசாரணை நடத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.


அதுமட்டுமன்றி அவர் குறித்த பராமரிப்பு நிலையத்திலுள்ள விசேட தேவையுடைய பிள்ளைகளுடன் சேர்ந்து கலந்துரையாடுவது போன்ற புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.
புதியது பழையவை