வெளிநாட்டு யுவதிக்கு பாலியல் வன்கொடுமை!



தொடுவாவ, தல்விலவெல்ல பகுதியில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட மசாஜ் நிலையமொன்றில் வெளிநாட்டு யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த மசாஜ் செய்பவரும் மசாஜ் நிலையத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தொடுவாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

தலவில மற்றும் ரம்புக்கன பிரதேசத்தில் வசிக்கும் 38 மற்றும் 43 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 வயதான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரே இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த மசாஜ் நிலையத்திற்கு பிரான்ஸ் நாட்டு யுவதியும் அவரது பெற்றோரும் மசாஜ் செய்ய வந்துள்ளனர், முதலில் யுவதியை மசாஜ் செய்யும் அறைக்கு அழைத்துச் சென்று மசாஜ் செய்து கொண்டிருந்த போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

தல்வில வெல்ல பிரதேசத்தில் இந்த மசாஜ் நிலையம் நடத்தப்பட்டு வருவதாகவும் இதற்கு சட்டபூர்வ அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
புதியது பழையவை