பல்கலைக்கழக மாணவன் உட்பட 17 பேர் கைது!யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் ஹெரோய்ன் பயன்படுத்தியதாக பொலிஸாரால் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைவரும் உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்தியமை மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவனும் உள்ளடங்கியுள்ளார்.

அத்துடன் போதைப்பொருள் விநியோகிப்பவர் ஒருவரும் கைதானவர்களில் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
புதியது பழையவை