கஜேந்திரன் எம்.பி உட்பட இருவர் கைது!தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். வலிகாமம் - தையிட்டி விகாரை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வந்த நிலையிலேயே இன்று (23)காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.


தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி நேற்றைய தினம் மதியம் மூன்று மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரன் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.


இந்த நிலையில், காவல்துறையினர் புதிய நீதிமன்ற உத்தரவொன்றை காண்பித்து போராட்டக்காரர்களை விலகும் படி தெரிவித்துள்ளனர்.


இதனை மறுத்த போராட்டக்காரர்கள் இன்று (23) காலை மீண்டும் எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.


இதனை தொடர்ந்தே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மகளிர் அமைப்பு அணியின் தலைவி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். பெண் காவல்துறையினர் இன்றி ஆண் காவல்துறையினரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றார்.
புதியது பழையவை