காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!காலநிலை தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் இன்று(01.05.2023) அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் பதுளை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மேலும் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை