பாப்பரசரின் இலங்கைக்கான நேரடி பிரதிநிதி கத்தரினா (Rit. Rev.BRIAN UDAIGWE) ஆண்டகை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
இவர் நேற்றைய தினம் (22.05.2023) தனது விஜயத்தின் போது திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது அவர் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் தொன்மையையும், வரலாற்றையும் கேட்டறிந்துக்கொண்டுள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயம்
இலங்கையில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு சொந்தமான காணியை உல்லாசத்துறை அபிவிருத்தியின் பெயரால் ஆக்கிரமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தமை அண்மையில் பெரும் சர்ச்சையாக அமைந்தது.
இந்நிலையில், பாப்பரசரின் இலங்கைக்கான நேரடி பிரதிநிதி கத்தரினா (Rit. Rev.BRIAN UDAIGWE) ஆண்டகையினதும் திருகோணமலை ஆயர் நோயல் இம்மானுவேல் ஆண்டகையினதும் இவ்விஜயம் மிகவும் முககியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.