கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கம் மீண்டும் புத்துயிர் பெறுகிறது!மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து செயற்பட்டு வந்த கிழக்கிலங்கை ஊடகவியலாளர் சங்கம், ஊடகவியலாளர்களான ஐ.நடேசன், தராக்கி சிவராம் ஆகியோரின் படுகொலைக்குப் பின்னர், தமது செயற்பாடுகளை நிறுத்தியிருந்த நிலையில், 19 வருடங்களின் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் ஆகியவற்றின்பங்களிப்போடு மீண்டும் செயற்படவுள்ளது.

இதன் மீள் ஆரம்பக் கூட்டம் இன்று மட்டு.ஊடக அமையத்தில், அதன் தலைவர் கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது.

கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் இரா.துரைரட்டனத்தின் ஆலோசனைக்கு அமைய, கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கத்தை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் ஆகியன பொறுப்பேற்றுக்கொண்டன.

கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கத்தை சம்பிரதாயபூர்வமாகப் பொறுப்பேற்றுகம் நிகழ்வு இன்று மட்டு.ஊடக அமையத்தில்
இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியாலர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.புதியது பழையவை