நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!



நியூசிலாந்தின் தெற்கு கடற்கரையில், ஒக்லாந்து தீவுகளுக்கு அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

6.2 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதழவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தின் ஜியோநெட் கண்காணிப்பு நிறுவனம், நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 33 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும், நிலநடுக்கம் உண்டான சேத விபரங்கள் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை