பாடசாலை கழிவறையில் வைத்து இரு சிறுவர்கள் துஷ்பிரயோகம் - இருவர் கைது!



கலவான கொடிப்பிலிகந்த பிரதேசத்தில் பாடசாலை பதில் அதிபர் மற்றும் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலையின் கழிவறையில் வைத்து நேற்று மாலை இரண்டு சிறுவர்களை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பாடசாலையின் பதில் அதிபரையும் நடன ஆசிரியரையும் கலவான பொலிஸார் கைது செய்துள்ளனர்.


12 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிறுவர்கள் பெற்றோருக்கு அறிவித்ததன் பிரகாரம் பிள்ளைகளுடன் வந்த பெற்றோர்கள் கலவானை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்களும் நீதிமன்றத்தில் ழுன்னிலைப்படுத்தபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை