முகம் குப்புற விழுந்துள்ள புத்தர் சிலை!இமதுவ அகுலுகஹா கல்குவாரிக்கு அருகில் கட்டப்பட்டுள்ள புத்தர் கோவிலின் கண்ணாடியை யாரோ உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை கவிழ்த்துள்ளதாக இமதுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படவில்லை என அப்பகுதியின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


புத்தர் சிலை மலர் இருக்கையில் முகம் குப்புற விழுந்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் பலர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
புதியது பழையவை