மின்னல் தாக்கி சகோதரர்கள் உயிரிழப்பு!மொனராகலை - கொணகங்கார பிரதேசத்தில் மின்னல் தாக்கி சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 32 வயதான 1990 அம்புலன்ஸ் சாரதி , 31 வயதான இளைஞர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயல்வெளியில் வேலை செய்துக்கொண்டிருந்த போது கடுமையான மழை பெய்தமையால், அங்குள்ள வாடியில் இருவரும் அமர்ந்திருந்த வேளை ஒருவரின் அலைபேசிக்கு வந்த அழைப்பிற்கு பதிலளிக்கும் போது ஏற்பட்ட கடுமையான மின்னல் தாக்கத்தினால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது வாடி தீப்பற்றி எரிந்ததனையடுத்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை