வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சார்ள்ஸையும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானையும் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
ஜனாதிபதி இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பிய கையோடு இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
இன்றைய தினம் 5 மாகாணங்களின் ஆளுநர்கள் தங்களின் பதவிகளிலிருந்து
விலகிக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
