கதிர்காமம் செல்ல வந்த பாதயாத்திரிகர் மட்டக்களப்பில் மரணம்iயாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் செல்வதற்காக பாதயாத்திரை வந்த பாதயாத்திரியர் ஒருவர் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வெளி வாயிலில் மரணமடைந்துள்ளார்.

இராசையா சிவலிங்கம் வயது 74 உடைய2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கைதடி இருந்து - 06.05.2023 ஆரம்பமான யாத்திரை பயணத்தில் மொத்தமாக 60 பேர் யாத்திரிகளாக வந்துள்ளனர்.

இன்று காலை சுமார் 6 மணியளவில் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன் வாயில் முன்பாக இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் உயிரிழப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு போலிஸார் மேற்க் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை