மட்டக்களப்பு மாவட்டம் கிழக்கு மாகாணம் தொடர்பாக இன்று 31.05.2023 திகதி கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் தமிழீழ விடுதலை இயக்கம் பிரசன்னா இந்திரகுமார்,(கட்சி உபதலைவர்),தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் கேசவன், (கட்சி உபதலைவர்) ஜனநாயக போராளிகள் கட்சி நகுலேஸ், (கட்சி உபதலைவர்)ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி இரா.துரைரெத்தினம், யோ.ரஜனி (வெல்லாவெளி மு.தவிசாளர்) உட்பட ஆகியோர் கலந்து கொண்டு பிரச்சினைகளை முன் வைத்தனர்.
1.குறிப்பாக, பாலர்பாடசாலை கல்விப் பணியகத்தின் கீழ் கடமையாற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும்.
2. எல்லைப் புறங்களிலுள்ள குறிப்பாக, மயிலத்தமடு, மாதவணை பகுதியில் கால்நடைகளுக்கு ஏற்படும் ஆபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
3. பாலர்பாடசாலை கல்விப் பணியகம், சுற்றுளாத்தறை அமைச்சு, வீடமைப்பு அதிககாரசபை, தனியர் போக்குவரத்து சபை போன்றவற்றை முன்னேற்றகரமாக செயற்பட வைத்தல்
4. ஆசிரியர்களை சமப்படுத்துதல்
5. பயிற்சியிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை (மேலதிக) ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குதல்
6. மாவட்டத்தில் போக்குவரத்து செய்யும் மண்டூர்,திகிலிவட்டை, அம்பிளாந்துறை பாதைகள் ஊடாக போக்குவரத்து செய்கின்றவர்களிடமிருந்து நிதி அறவீடு செய்வதை தடுத்து நிறுத்துதல்
7. கிழக்கு மாகாணசபையின் கீழ் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் கடமை புரிகின்றவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல்
8.சிரேஸ்ட பதவிகளுக்கு நியமனம் செய்யப்படுகின்றவர்கள் நீதியான முறையில் நியமனம் செய்யப்பட வேண்டும்.
இது போன்ற விடயங்கள் முன் வைக்கப்பட்டு, சில விடயங்களுக்கு தீர்வுகளும் எட்டப்பட்டுள்ளது. என மு.கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஈ.பிஆர்.எல்.எப் இரா.துரைரெத்தினம், தெரிவித்துள்ளார்.