20 வயதான யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஸ்நாயக்கபுர பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றியவர் எனவும் அவர் 2021 ஆம் ஆண்டு முதல் நிகவெரட்டிய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேகத்திற்குரிய பொலிஸ் சார்ஜன்ட் குறித்த யுவதியின் உறவினர் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குறித்த யுவதி தனியாக இருந்த போது வீட்டிற்குள் நுழைந்த பொலிஸ் சார்ஜன்ட் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
யுவதி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட ரஸ்நாயக்கபுர பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் சார்ஜன்ட் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரஸ்நாயக்கபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பொலிஸ் சார்ஜெண்டிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.