மருத்துவ நிலையத்திற்கு சென்ற பெண்ணை வன்புணர்வு செய்த வைத்தியர்!சியம்பலாபே பிரதேசத்தில் தனியார் மருத்துவ நிலையமொன்றில் சிகிச்சை பெற வந்த 42 வயதுப் பெண்ணை வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் வைத்தியரைக் கைது செய்ய பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குறித்த பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், தன்னை வல்லுறவுக்கு உட்படுத்திய வைத்தியரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதியது பழையவை