கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - சற்று முன்னர் பொலீசாரால் சட்ட விரோதமான முறையில் கைது!


கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சற்று முன்னர் பொலீசாரால் சட்ட விரோதமான முறையில் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். 

அவர் மருந்தங்கேணிக்கு அழைத்துச் செல்லப்பட்டவுள்ளதாக அங்கு நின்றவர்கள் கூறினார்கள்.

நாளை வாக்குமூலம் பதிவு செய்ய ஏற்கனவே அவருக்கு அழைப்பு விடுத்த நிலையில் இன்று சிறப்புரிமையை மீறியமை தொடர்பாக அவரது பாராளுமன்ற உரையை நிகழ்த்தவிடாமல் தடை செய்ய இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்ய எந்த வித ஆவணங்களுமின்றி வந்த பொலீசார் அங்கு நடந்து கொண்ட விதத்தை நேரடியாக பார்க்கும் போது ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன என்ற கேள்வி மட்டும் எஞ்சி நிற்கிறது.
புதியது பழையவை