அரபிக்கடலில் உருவானது புயல்!



அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(05.06.2023) மாலை 05:30 மணி அளவில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.

நேற்று (06.06.2023) காலை 05:30 மணி அளவில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குறித்த இடத்தில் நிலவி வருகிறது.



இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.


தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்காரணமாக மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடற்றொழில் மேற்கொள்ளும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
புதியது பழையவை