மட்டக்களப்பு மாங்காடு பிரதேசத்தில் மீன் உணவினை சாப்பிட்டு உயிரிழந்த பெண் - மரணத்தின் காரணம் குறித்து அதிர்ச்சி!மட்டக்களப்பு மாங்காடு கிராமத்தில் மீன் உணவினை சமைத்து சாப்பிட்ட பின் உயிரிழந்த இளம் தாயின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் பாஃபர் என்ற மீனினை சமைத்து உண்ட நிலையில் இவை விசமாகி உடல் முழுவதும் பரவி உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை களுவாஞ்சிகுடி பொது வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

நச்சு தன்மையான மீனினத்தை உட்கொண்டமையினால் உயிரிழப்பு சம்பவித்திருக்கலாம் எனவும் இந்த மீனில் ட்ரெற்றோட டோக்சின் எனும் ஒரு வகையான நச்சு தன்மையும் உள்ளமை குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தில் 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே (08.06.2023) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் கனடாவிற்கு அடுத்த மாதம் செல்லவிருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதிய உணவை உட்கொண்ட பின்னர் அவரது 4 மற்றும் 7 வயதுடைய இரு பிள்ளைகள் மற்றும், அவரது தாயார் உட்பட 4 பேர் வாந்தியெடுத்து மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
புதியது பழையவை