செங்கலடி பொதுச் சந்தையின் மீன் வியாபார கட்டத்திறப்பு விழா!மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று செங்கலடி பொதுச் சந்தையின் மீன் வியாபார கட்டத்திறப்பு விழா இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டார்.

மீன் சந்தைக்கட்டடம் சுமார் இருபது மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்டுள்ளது.

செங்கலடி பிரதேச சபையின் செயலாளர் பற்குணன் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், உள்ளுராட்சி ஆணையாளர் மணிவண்ணன் மற்றும் உதவி ஆணையாளர் பிரகாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை