மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தருமான பா. அரியநேந்திரன்
தங்களின் தலைவர் யாரென்று தெரியவில்லையென்று குறிப்பிட்டிருக்கின்றார்.
கதிரையில் ஒரு தலைவரை பார்த்த நாங்கள் இப்போது பத்து தலைவர்களை கதிரையில் காண்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.
இதன் மூலம் தமிழரசு கட்சிக்குள் நிகழும் தலைமைத்துவ போட்டி தொடர்பிலேயே அரியநேந்திரன் கவலைப்படுவது தெளிவாகின்றது.
அரியநேந்திரன் கூறுவது உண்மைதான் – தமிழரசு கட்சியின் உண்மையான தலைவர் யாரென்று எவருக்கும் தெரியவில்லைதான்.
இந்தப் பின்புலத்தில்தான் அவ்வப்போது கட்சியின் தலைவர் யார் என்னும் கேள்வி ஊடகங்களில் செய்திகளாகின்றன.
கட்சியிலுள்ள பலரும் அவ்வப்போது, தான் தலைமையை பொறுப்பேற்க தயாராக இருப்பதாக அறிக்கை வெளியிடுகின்றனர்.