பேருந்து விபத்தில் சிக்கி பாடசாலை மாணவர் உயிரிழப்பு!பதுரலிய – கெலிங்கந்த மத்துகம வீதியில் மகேலியல்ல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்திற்கான காரணம்
மேலும், விபத்தில் உயிரிழந்தவர் கெலின்கந்த காலனி அகலவத்தை என்ற முகவரியில் வசிக்கும் 16 வயதுடைய தில்ஷான் என்ற பாடசாலை மாணவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்துகம டிப்போவுக்குச் சொந்தமான பேருந்து கெலிங்கந்தவிலிருந்து மத்துகம நோக்கிச் சென்று கொண்டிருந்த போது எல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த அணையில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் புலத்சிங்கல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை