ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் - கிழக்கு ஆளுனர் செந்தில் தொண்டமான்



ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றாக இணைந்து பயணிப்பதன் மூலம் மாகாணங்களை முதல் நிலைக்கு கொண்டு வர முடியும் என்பது உணரப்பட்டுள்ளதன் காரணமாக இன்று அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஏற்றுமதியை நோக்காக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் வாழை மற்றும் மாதுளை உற்பத்தியாளர்களுக்கான நீர்ப்பம்பிகள் வழங்கும் நிகழ்வு இன்று (10.06.2023) மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு - கல்லடி சன்சைன் கிறான்ட் மண்டபத்தில் மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில்தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

உற்பத்திகளுக்கு முன்னுரிமை

இதன்போது கருத்து தெரிவித்த ஆளுனர், விவசாயிகளின் உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலமே அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

எந்த துறையானாலும் அவர்கள் சாதனைகள் படைப்பதற்கு போசாக்கான உணவு அவசியமாகும். அதனை எல்லோராலும் வழங்க முடியாது. விவசாயிகளால் மட்டும் தான் வழங்க முடியும்.

அவ்வாறான அங்கீகரிக்கப்படாத விவசாயிகளை நாங்கள் அடையாளம் கண்டு நாங்கள் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

அதிகளவில் வாய்ப்புகள்

விவசாயிகளுக்கான உதவிகளை மேலதிகமாக வழங்கும் போது விவசாயிகளின் உற்பத்திகளும் அதிகளவில் கிடைக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எப்போது ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றாக செயற்படுகின்றார்களோ அன்று இலங்கையில் முதல் மாவட்டமாக இது மாறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


அதற்கு இந்த மேடையானது நல்ல முன்னுதாரணமாகும். இங்குள்ள அனைவரும் விவசாயிகளினை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையே முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது, நவீனமயமாக்கல் திட்டத்தின் கிழக்கு மாகாண பிரதி பணிப்பாளரும் முன்னாள் மட்டக்களப்பு அரசாங்க அதிபருமான கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தன், மற்றும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கிழக்கு மாகாண உத்தியோகத்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


புதியது பழையவை