மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்று சிக்குண்டிருக்கும பெண்களை உடனடியாக தாய்நாட்டிற்கு அழைத்து வர
நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி மட்டக்களப்பு செங்கலடியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அருவி பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில், பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்ற பெண்களை மீட்டு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென
கோரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.