வடக்கு நோக்கி நகரும் சூறாவளி! கடற்தொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள பிபார்ஜோய் (Biparjoy) சூறாவளி மேலும் வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி வடக்கு திசை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்தொழிலாளர்களுக்கான அறிவிப்பு
எனவே கடற்தொழிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் சுசந்த கஹவத்த அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை