மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் காரை மோதித்தள்ளிய அரச பேருந்து!



மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் நேற்று (07-06-2023)  பிற்பகல் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 


இவ் விபத்து குருக்கள்மடம் கிருஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளதுடன் அவ் இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறுவது வழமையான ஒன்றாகிவிட்டது.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதிஊடாக  மட்டக்களப்பு பகுதியிலிருந்து இரத்தினபுரி நோக்கி  பயணித்துக்கொண்டிருந்த காரை அதே திசையினூடாக பயணித்துக்கொண்டிருந்த அரச பேருந்து மோதித்தள்ளியதில் கார் குடை சாய்ந்ததுடன் காரின் பின்பகுதி பலத்த சேதமடைந்ததுடன் பஸ்ஸினது முன்பகுதியும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. 

இவ் விபத்தின்போது காரில் பயணித்த இருவர் பலத்த  காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



புதியது பழையவை