அம்பாறை அக்கரைப்பற்றில், 19 வயதுடைய இளைஞன் சடலமாக மீட்பு!அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில், பனங்காட்டு பாலத்திற்கு அண்மையில், பூர்த்தி செய்யப்படாத
கட்டடமொன்றிலிருந்து 19 வயதுடைய இளைஞனொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய கந்தசாமி அலக்ஷன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவாவர்.

தாயாருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இளைஞன் வீட்டை விட்டு வெளியேறியிருந்த நிலையில், தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துள்ளார்.


சடலம் மீட்கப்பட்ட கட்டடத்தின் உரிமையாளர் நேற்றைய தினம் கட்டடத்தைப் பார்வையிடச் சென்றபோதே, சடலத்தை அவதானித்துள்ளார்.

சம்வம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை