நீண்ட காலமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது!அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு இந்து மயானத்திற்கு அருகே நீண்ட காலமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த நபர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய, பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்கவின்
வழிநடத்தலில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து 28 சந்தேக நபர்களை நேற்று மாலை பொலிஸார் கைது செய்தனர்.

சட்டவிரோதமாக ஒன்று கூடி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பொலிஸ் பிணையில்
அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை