நீதிமன்றத்தை நாடுகின்றது பெஃப்ரல் அமைப்பு!உள்ளுராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கு ஏதுவாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை வரைபுக்கு எதிராக இன்று நீதிமன்றத்தை நாடவுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.


இந்த சட்டமூலம் அரசியலமைப்பை தெளிவாக மீறுவதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது தவறான முன்னுதாரணமாக அமையும் என்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
புதியது பழையவை