சுவாமி விபுலானந்தரின் 76வது சிரார்த்த தினமும்



உலகின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக்கொண்ட சுவாமி விபுலானந்தரின் 76வது சிரார்த்த தினமும், மட்டக்களப்பு சிவனந்த தேசிய பாடசாலையின் ஸ்தாபக தினமும் இன்று (19-07-2023) காலை அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்லடியில் உள்ள அன்னாரின் சமாதியில் இன்று காலை சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டுச்சபையின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டுச்சபையின் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஸ்ணமிசன் பொது முகாமையாளர்
ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்த ஜி மகராஜ், உதவி பொது முகாமையாளர் சுவாமி சுரார்சிதானந்தர் ,கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி பாரதி கெனடி, முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் மு.விமலநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விபுலானந்தரின் வெள்ளை நிற மல்லிகையோ பாடல் பாடப்பட்டதை தொடர்ந்து சமாதிக்கு சுவாமியிhல் மாலை அணிவிக்கப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் சமாதிக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தியதுடன் வழிபாடுகளிலும் கலந்துகொண்டனர்.

வழிபாடுகளை தொடர்ந்து சுவாமி விபுலானந்தரின் திருவுருவம் தாங்கிய பதாகைகள் மற்றும் சிலைகளுடன் சிவானந்த தேசிய பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள், விரிவுரையாளர்கள் இணைந்து இனிய இசையுடன் ஊர்வலமும் இடம்பெற்றது.
புதியது பழையவை