தமிழருக்கான அதிகாரப் பகிர்வு - மோடிக்கு நீண்ட கடிதம் அனுப்பினார் சம்பந்தன்



தமிழ் மக்களுடன் ஆட்சி அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு இந்தியாவுக்கு விஜயமாகவுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்கவை வலியுறுத்த வேண்டுமென்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் இந்தியப் பிரதமரை கடிதம் மூலம் கோரியுள்ளார்.


தமிழ் மக்களின் பாதுகாப்பு, அடையாளம், இருப்பு ஆகியவை இந்தியாவின் பாதுகாப்பிலிருந்து குறிப்பாக அதன் தெற்கு அயல் நாடுகளில் இருந்து பிரிக்க முடியாதவை என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.

துரதிஷ்டவசமாக தமிழ் மக்களின் பாதுகாப்பும் இந்தியாவின் பாதுகாப்பும் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகி 36 வருடங்கள் கடந்தும் மழுப்பலாகவே உள்ளது என்றும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.


இந்தியாவுக்கு விஜயமாகவுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்தியப் பிரதமரை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

இதன்போது அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமிழருக்கான அதிகாரப் பகிர்வு குறித்து வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்து இரா. சம்பந்தன் இந்திய பிரதமருக்கான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.


இந்தக் கடிதம் நேற்று திங்கட்கிழமை கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் கையளிக்கப்பட்டது. நீண்ட அந்தக் கடிதத்தில் பல விடயங்களை சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.



புதியது பழையவை