பலரது பலநாள் உழைப்பு ஒரு சில நிமிடங்களில் நிர்மூலமாகியது - மட்டக்களப்பில் சம்பவம்மட்டக்களப்பு வாழைச்சேனையில் இன்றைய தினம் பிற்பகல் வேளையில் வாகன தரிப்பிடம் ஒன்றில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமாகிய மோட்டார்சைக்கிள் சைக்கிள்களின் புகைப்படங்கள்

இவ் தீ விபத்தில் ஒரு முச்சக்கரவண்டி மற்றும் 34 மோட்டார் சைக்கிள்களும் 11 துவிச்சக்கர வண்டிகளும் எரிந்து நாசமாகியுள்ளன.

இன்றைய (18-07-2023)தினம் பிற்பகல்
3:30 PM மணியளவில் வாழைச்சேனை பொலிஸ்நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தனிநபர் ஒருவரின் காணியில் நடத்தப்பட்டு வந்த வாகன தரிப்பிடத்திலே இந்த தீ அனர்த்தம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் அங்கு நிறுத்தி வைத்திருந்த 1 ஓட்டோ மற்றும் 11 துவிச்சக்கர வண்டிகள் மற்றும் 34 மோட்டார்சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

வாழைச்சேனை நகருக்கு வேலை நிமிர்த்தம் வருகை தருகின்ற பலர் தங்களது மோட்டார்சைக்கிள்கள் துவிச்சக்கரவண்டிகளை இவ் வாகன தரிப்பிடத்தில் தரித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பலர் தங்களது வாகனங்கள் எரிந்து நாசமானது கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுததை காணக்கூடியதாக இருந்தது. இங்கு கூலித்தொழிலுக்கு வருகைதரும் பலரது சைக்கிள்களே நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் விபத்து ஒரு திட்டமிடப்பட்ட சதிவேலையா அல்லது தற்செயலாக இடம்பெற்றதா என்பது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

புதியது பழையவை