உள்ளூராட்சி நிறுவனங்களில் உறுதிப்படுத்தப்படாத 10,000 ஊழியர்களை உடனடியாக நிரந்தரப்படுத்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் விரைவில் நிரந்தர ஊழியர்களாக உள்வாங்கப்படுவார்கள் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் 12,000 வெற்றிடங்கள் காணப்படுவதால், அந்த வெற்றிடங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த வேலைத்திட்டத்திற்கான அமைச்சர்களின் அனுமதி விரைவில் பெறப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.