காட்டுயானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!அனுராதபுரம்- கஹடகஸ்திகிலிய திவுல்வெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக திவுல்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றைய தினம் (11.07.2023) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கஹடகஸ்திகிலிய- பபரஹெல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் உயிரிழந்த
குறித்த நபர் மாடு மேய்ப்பதற்காக அப்பகுதியிலுள்ள குளத்திற்கு சென்றபோது யானை தாக்கியதாகவும் இதனையடுத்து இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கஹடகஸ்திகிலிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக திவுல்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை