மட்டு - துறைநீலாவணையில் கறுப்பு ஜீலை தின நிகழ்வு முன்னெடுப்பு!மீண்டும் ஒரு கறுப்பு ஜூலைக்கு அரசாங்கம் வித்திடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு துறைநீலாவணை தமிழரசுக்கட்சியின் வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் கறுப்பு ஜீலை தின நிகழ்வு இன்று துறைநீலாவணையில் வட்டாரக்கிளையின் தலைவர் த.கணேசமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸ் அதிகாரம் இல்லாத அதிகார பரவலாக்கலில் நாம் எவ்வாறு எமது மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து பாதுகாக்க முடியும் என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

தற்போதைய தலைவர்கள் மக்களை காப்பாற்ற முடியாத நிலையிலேயே செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவமானது அரசியல் இலாபம் ஈட்டும் வகையில் திட்டுமிட்டு செய்யப்பட்ட விடயமாக தற்போது வரையில் பேசப்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் ஞா.சிறிநேசன் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் காரைதீவுப் பிரதேசசபை தவிசாளர் கி.ஜெயசிறில் தமிழசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவர் உட்பட தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை