மதுபோதையின் உச்சம் - நடுவீதியில் உறங்கிய போக்குவரத்து பொலிஸ்



போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மதுபோதையில் பாதையில் படுத்து உறங்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தம்புத்தேகம - நொச்சியாகம நடுவீதியிலே குறித்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் படுத்து உறங்கியுள்ளார்.

வீதியில் உறங்கிய பொலிஸ் உத்தியோகத்தரை சிலர் பார்வையிட்டுள்ளதுடன் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

பெரும்பாலான போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை சரியாக செய்யாமல் இலஞ்சம் வாங்குதல் போன்ற பல சட்டவிரோத செயல்களில் ஈடுப்பட்டுள்ளதுடன் இதனால் சாரதிகளின் பொறுப்பற்ற தன்மை அதிகரித்து தொடர்ச்சியாக பல வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் தற்போது பதிவாகியுள்ள இவ்வாறான சம்பவங்கள் போக்குவரத்து சேவையின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குட்படுத்துகின்றன.
புதியது பழையவை