ஊடகவியலாளர்களுடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் விசேட கலந்துரையாடல்



திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்குமிடையிலான சந்திப்புபொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது இன்று(22.07.2023) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக ஆளுநர் தெரிவிப்பு


இதன்போது ஊடகவியலாளர்களின் குடும்பமொன்றிற்கு சுயதொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதன் முதல் கட்டமாக கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலிருந்தும் முப்பது பேர் வீதம் தெரிவு செய்யப்பட்டு சமூக சேவைகள் திணைக்களம் ஊடாக, சுயதொழில் நடவடிக்கைகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்படுமென அவர் மேலும் குறிப்பி்ட்டுள்ளார்.


குறித்த சந்திப்பில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள ஊடகவியலாளர்கள் 30 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை