கொழும்பில் கோரவிபத்து - சம்பவ இடத்திலேயே தமிழ் இளைஞர்கள் உயிரிழப்பு!



கொழும்பில் நேற்று(20) இடம்பெற்ற கோர விபத்தில் தமிழ் இளைஞர்களான உறவினர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கொழும்பு - கொலன்னாவை பிரதான வீதியில் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வத்தளையைச் சேர்ந்த அன்ரனி மரியநாயகம் (வயது 26), அவரது மைத்துனரான தேவதாஸ் கனிஸ்ரன் (22 வயது) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்துள்ள காவல்துறையினர், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை