துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு!தலவத்துகொட – வெலிபார பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர் சிறீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் பலியானவர் தலவத்துகொட – வெலிபார பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை