இலங்கைப் பெண்களினால் - ஜப்பானுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!ஜப்பானிய தடுப்புக்காவல் நிலையத்தில் மோசமாக நடத்தப்பட்டு உயிரிழந்த இலங்கை பெண் தொடர்பில் மரணம் தொடர்பில் அவரது சகோதரிகள் ஜப்பான் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஜப்பானின் நாகோயாவில் அமைந்துள்ள குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலி என்ற இலங்கைப் பெண் 2021 ஆம் ஆண்டு மார்ச் 06 ஆம் திகதி உயிரிழந்ததாக டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதி செய்திருந்தது.

2017ஆம் ஆண்டு மாணவர் விசாவில் ஜப்பான் சென்ற விஷ்மா சந்தமாலி, விசாவைக் காலம் முடிந்தும், ஜப்பானில் தங்கியிருந்தமைக்காக, 2021 ஜனவரி முதல், தடுத்து வைக்கப்பட்டு வாந்தி மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக மார்ச் 6 ஆம் திகதியன்று உயிரிழந்திருந்தார்.

2021 ஆகஸ்ட் மாதம் வெளியான விசாரணை அறிக்கையில், தொடர்புடைய தடுப்பு முகாம்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மனித உரிமைகள் குறித்தான விழிப்புணர்வு இருப்பதில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜப்பான் அரசாங்கம் மீது வழக்கு இருப்பினும், விஷ்மா மரணத்திற்கு காரணமானவர்கள் என கூறி 13 ஊழியர்கள் மீது வழக்கு பதிய சட்டத்தரணிகள் மறுத்துள்ளதாகவே கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஷ்மாவின் சகோதரிகள் வயோமி மற்றும் பூர்ணிமாவினால் ஜப்பான் அரசாங்கம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இலங்கை பெண் விஷ்மாவுக்கு முறையான உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்க தவறியதாகவும் அதில் குற்றம்சாட்டியுள்ளனர். 
புதியது பழையவை